இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் வீரர் சிவ்பால் சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பரம் வீர் சக்ரா விருதுபெற்ற மறைந்த கேப்டன் மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரர்களுக்கு மரியாதை.
प्रविष्टि तिथि:
13 JAN 2022 4:22PM by PIB Chennai
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர் சிவ்பால் சிங், சுதந்திரத்துக்கு பின்னர் உயிர்த்தியாகம் புரிந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு சென்றார். இது அனைத்து இந்திய மக்களின் பாரம்பரிய இடமாக உள்ளது .
போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற சிவ்பால் சிங்கை ஊழியர்கள் வரவேற்றனர். பல்வேறு போர்களில் பங்கேற்று உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது வீரச்செயல்களை ஊழியர்கள் விளக்கினர். பரம் வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த கேப்டன் மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். ராணுவ வீரர் என்ற முறையில், போர் நினைவுச் சின்னம் தனது உணர்வுகளை உந்தித்தள்ளுவதாக குறிப்பிட்டார். வீரர்களின் உயிர்த்தியாகத்தினால் நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.
****
(रिलीज़ आईडी: 1789700)
आगंतुक पटल : 252