மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாம் இணைந்து செயல்பட தேசிய புத்தாக்க வாரம் ஊக்குவிக்கும்: மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார்
प्रविष्टि तिथि:
12 JAN 2022 7:04PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா உணர்வுடன், இந்தியா 2.0 கனவை நனவாக்குவதற்கு, நாம் இணைந்து செயல்பட தேசிய புத்தாக்க வாரம் ஊக்குவிக்கும் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறினார்.
‘‘கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சூழலை உருவாக்குவதல்’ என்ற மின்னணு- கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு பேசியதாவது:
புத்தாக்கம். தொழில் முனைவு, புதிய கல்வி கொள்கையில் உள்ளது போல் விவேக சிந்தனை ஆகியவற்றை ஊக்குவிப்பதுதான் நமது இலக்கு. இந்திய பொருளாதாரத்தை அதிகரிக்கவும், 2024-25ம் ஆண்டுக்குள், 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடையவும், இந்தியா உறுதி பூண்டுள்ளது. முதலீட்டுக்கு வழி ஏற்படுத்துவது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது, உற்பத்திக்கான மையமாக இந்தியாவை உருவாக்குவதல் மற்றும் புத்தாக்கம் ஆகியவை தற்சார்பு இந்தியாவை அடைய உதவும்.
அரசு அமைச்சகங்கள், துறைகள், தொழில் துறை தலைவர்கள் என அதை்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்துள்ளது. அப்போதுதான் அவைகளால் புத்தாக்கம் ஆராய்ச்சி கலாச்சாரத்தை உருவாக்கி, இளம் கண்டுபிடிப்பாளர்களை வளர்க்க உதவ முடியும். இதன் மூலம் சமூகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கும், சவால்களுக்கும் தீர்வு காண முடியும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789430
**********
(रिलीज़ आईडी: 1789501)
आगंतुक पटल : 199