சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

வழக்குகள் தீர்வுக்கு மிகவும் பயனுள்ள மாற்று சாதனமாக லோக் அதாலத்தின் வளர்ச்சி உள்ளது

Posted On: 12 JAN 2022 3:58PM by PIB Chennai

நாட்டின் குடிமக்களுக்கு முறையாகவும், செலவு இல்லாமலும் நீதி வழங்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நால்சா) உறுதிபூண்டுள்ளது. வழக்குகள் தீர்வுக்கான மாற்று நடைமுறை மூலம் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க கூடுதல் முக்கியத்துவம் வழங்குவது என அண்மையில் நால்சா முடிவு செய்தது.

 இந்த இலக்கை எட்டுவதற்கு லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற அமைப்பின் உத்திகளில் சட்டசேவைகள் ஆணையங்கள் மாற்றத்தை செய்துள்ளன. இதன்  தொடக்க நடவடிக்கையாக இத்தகைய மக்கள் நீதிமன்றங்களின் அதிகபட்ச வழக்குப் பைசல்களுக்கு வழிகாட்ட அனைத்து மாநிலசட்டசேவைகள் ஆணையங்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு  நால்சா ஏற்பாடு செய்தது.

ஏற்பாடு மற்றும் திரட்டல் நடவடிக்கைகளின் காரணமாக 2021-ம் ஆண்டில் அசாதாரணமான அளவில் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 4 தேசிய மக்கள் நீதிமன்றங்களின் மூலம் மொத்தம் 1,27,87,329 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. இவை 55,81,117 நிலுவை வழக்குகளையும் 72,06,212 நீதிமன்றம் செல்வதற்கு முந்தைய வழக்குகளையும் உள்ளடக்கியதாகும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வழக்குகளை பைசல் செய்திருப்பது சாமானிய மக்களின் நீண்ட கால சட்டப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து நிம்மதி அளித்துள்ளது.

வழக்கமான முறையில் தீர்வுகாண்பது மட்டுமின்றி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இ-லோக் அதாலத் எனப்படும் இணையவழியிலான மக்கள் நீதிமன்றங்களையும் ஆணையங்கள் அறிமுகம் செய்துள்ளன.

 தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக மக்கள் நீதிமன்றங்கள் வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்றடைந்துள்ளன. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து அல்லது பணி செய்யும் இடங்களிலில் இருந்து மக்கள் நீதிமன்றங்களில் பங்கேற்க முடிவதால் இதற்காக பயணம் செய்வதும், முழு நாளை செலவு செய்வதும் தவிர்க்கப்பட்டு சில நிமிடங்களிலேயே பங்கேற்க முடிகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789360

 

****


 



(Release ID: 1789413) Visitor Counter : 303