குடியரசுத் தலைவர் செயலகம்
பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி, போகாலி பிஹு, உத்தராயன் மற்றும் பவ்ஷ் பார்வா பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
12 JAN 2022 5:35PM by PIB Chennai
லோஹ்ரி (13 ஜனவரி 2022), பொங்கல், மகர சங்கராந்தி, போகாலி பிஹு, உத்தராயன் மற்றும் பவ்ஷ் பார்வா (14 ஜனவரி 2022) பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், “லோஹ்ரி, பொங்கல், மகர சங்கராந்தி, போகாலி பிஹு, உத்தராயன் மற்றும் பவ்ஷ் பார்வா பண்டிகைகளை முன்னிட்டு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்நாட்டில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் இயற்கை மற்றும் வேளாண்மையுடன் ஒன்றிணைந்த நமது உறவு முறையை பறைசாற்றுவதாக உள்ளது. லோஹ்ரி, பொங்கல், மகர சங்கராந்தி, போகாலி பிஹு, உத்தராயன் மற்றும் பவ்ஷ் பார்வா போன்ற பண்டிகைகள் பயிர்கள் அறுவடை மற்றும் குளிர்காலம் முடிவுக்கு வருவதையும், வசந்த காலத்தில் அடியெடுத்து வைப்பதையும் குறிக்கின்றன. அறுவடையின் பலனை மக்கள் அனுபவித்து கொண்டாடும் இதுபோன்ற பண்டிகைகள், நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன. இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உதாரணம் என்பது மட்டுமின்றி, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கைக்கும் சிறந்த உதாரணம்.
இதுபோன்ற பண்டிகைகள், சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் அதேவேளையில் நாட்டில் வளமும், மகிழ்ச்சியும் பொங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1789405)
Visitor Counter : 242