பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


“எனது கனவு இந்தியா” மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள்” குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார்

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம் மற்றும் திறந்தவெளி அரங்குடனான கலையரங்கம்- பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தைத் தொடங்கிவைத்தார்

“இந்தியாவின் மக்கள் தொகை இளமையாக இருக்கிறது, இந்தியாவின் மனநிலையும் இளமையாக இருக்கிறது. இந்தியாவின் ஆற்றலில், அதன் கனவுகளில் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியா அதன் சிந்தனைகளிலும் அதன் உணர்வுகளிலும் இளமையாக இருக்கிறது”

“இந்தியா அதன் இளைஞர்களை மக்கள் செல்வமாகவும் வளர்ச்சியை உருவாக்குபவர்களாகவும் கருதுகிறது”

“இந்தியாவின் இளைஞர்கள் கடுமையான பணிக்கான தகுதியையும் எதிர்காலம் பற்றிய தெளிவையும் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா இன்று சொல்வதை நாளைய குரலாக உலகம் கருதுகிறது”

“பழமையான நடைமுறைகளால் இளைஞர்களின் திறன் சுமையாகிவிடக் கூடாது. இப்போதைய இளைஞர்கள் தாமாகவும், சமூகத்தாலும் உருவாகி புதிய சவால்களை சந்திப்பார்கள்”

“இன்றைய இளைஞர்கள் “நம்மால் முடியும்” என்ற உணர்வைக் கொண்டிருக்கிறார்கள் இது ஒவ்வொரு தலைமுறைக்கும் ஈர்ப்பு சக்த

Posted On: 12 JAN 2022 12:55PM by PIB Chennai

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, “எனது கனவு இந்தியா மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள் குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளைப் பிரதமர்  வெளியிட்டார். இந்த இரண்டு மையப் பொருட்களின் மீது 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து இவை தெரிவு செய்யப்பட்டன. புதுச்சேரியில்  ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரசால் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  திறந்தவெளி அரங்குடனான கலையரங்கம்- பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர்  தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நாராயண் ரானே, திரு பானு பிரதாப் சிங் வர்மா, திரு நிதிஷ் ப்ரமாணிக், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய இளையோர் தினத்தன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுவாமி விவேகானந்தருக்குத் தலைவணங்கிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா நடைபெறும் இந்த ஆண்டில் அவரது பிறந்த நாள் அனைத்து வகையிலும் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றார். இதே ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் கூறினார். “இந்த இரு துறவிகளும் புதுச்சேரியுடன் தனித்துவ உறவைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள்என்று பிரதமர் கூறினார்.

பண்டைக்கால தேசத்தின் இளமைப் பண்புகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உலகம் தற்போது இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் பார்ப்பதாக கூறினார்ஏனெனில், இந்தியாவின் மக்கள் தொகை இளைஞர்களை அதிகம் கொண்டதாக இருப்பதால், இந்தியாவின் மனதும் இளமையாக உள்ளது என்றார்இந்தியாவின் திறமை மற்றும் அதன் கனவுகளில்  இளமைத் துடிப்பு காணப்படுகிறதுஇந்தியாவின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளும் இளமையாகவே உள்ளதுஇந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவம் எப்போதும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதோடு அதன் பழமையிலும் புதுமை காணப்படுவதாக அவர் கூறினார்நாட்டில் இளைஞர்கள் தேவை ஏற்படும் நேரத்தில் சேவையாற்ற எப்போதும் தயாராக இருப்பார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்எப்போதெல்லாம் தேச உணர்வு பிளவுபடுகிறதோ, அப்போதெல்லாம் ஆதி சங்கராச்சாரியா என்ற ஒற்றுமை இழை மூலம் நாட்டை இணைக்க முன்வருவார்கள்கொடுமைக்காலங்களில் குரு கோபிந்த் சிங்கின் சாஹிப்ஜாடே போன்ற இளைஞர்களின் தியாகங்கள் தற்போதும் நமக்கு வழிகாட்டுகிறதுஇந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் தேவைப்பட்ட போது, பகத்சிங், சந்திரசேகர ஆசாத் மற்றும் நேதாஜி சுபாஷ் போன்ற புரட்சிகரமான இளைஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்க முன்வந்தனர்நாட்டிற்கு ஆன்மீக புத்துணர்வு தேவைப்படும் நேரங்களில் அரவிந்தர் மற்றும் சுப்பிரமணிய பாரதி போன்ற மகான்கள் நினைவுக்கு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய இளைஞர்கள் ஜனநாயகப் பண்புகளுடன் மக்கள் தொகை ரீதியான பங்களிப்பு கொண்டவர்களாக  இருப்பதோடு, அவர்களின் ஜனநாயக பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் தெரிவித்தார்இந்தியா தனது இளைஞர்களை  மக்கள் தொகை அடிப்படையில் பங்களிப்பு வழங்கக்கூடியவர்களாகவும், வளர்ச்சி இயந்திரமாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்தற்போது இந்திய இளைஞர்கள் துடிப்புமிக்க தொழில்நுட்ப ஆற்றல் பெற்றவர்வளாகவும், ஜனநாயக உணர்வுகள் கொண்டவர்களாக திகழ வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்இந்திய இளைஞர்கள் கடினமாக  உழைக்கும் திறனை பெற்றிருந்தால், எதிர்காலத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனவேதான், உலகம் தன்னை எதிர்காலத்தின் குரலாக பார்க்கிறது என இந்தியா தற்போது கூறிவருகிறது

நாடு சுதந்திரம் அடைந்தபோது இளைஞர்களாக இருந்த தலைமுறையினர், நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கியதில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்ஆனால் தற்கால இளைஞர்கள்  நாட்டிற்காக வாழ்வதுடன், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்இளைஞர்களின் திறமை மீது பழங்கால நடைமுறைகளை சுமத்தக் கூடாது, அவர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை தாம் அறிந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.    புதிய சவால்கள், புதிய கோரிக்கைகள் மற்றும் புதிதாக ஒன்றை உருவாக்கக்கூடியவர்களாக இளைஞர்கள் தனக்குத்தானேயும், சமுதாயத்தாலும் சுற்றிச்சுழன்று பணியாற்றலாம்தற்கால இளைஞர்கள்சாதிக்க முடியும்என்ற உணர்வுடன் இருப்பதாக கூறிய பிரதமர், இது அனைத்து தலைமுறைக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றார்.

இந்திய இளைஞர்கள் தற்போது உலகின் வளமைக்கான குறியீட்டை எழுதி வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்இந்திய இளைஞர் சக்தி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சூழலில் மதிப்பிடக்கூடியதாக உள்ளதுஇந்தியா தற்போது 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் வலிமை சூழல் முறையை  கொண்டதாக உள்ளதுஇதில் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் பெருந்தொற்று சவாலுக்கு இடையே உருவானவைபுதிய இந்தியா- போட்டியிடு மற்றும் வெற்றி பெறு என்ற  தாரக மந்திரத்தை பிரதமர் வெளியிட்டார்அதாவது ஈடுபாட்டுடன் பணியாற்றி வெற்றி அடைய வேண்டும், ஒன்றுபட்டு போர்க்களத்தில் வெற்றி பெறு என்பது இதன் பொருள்ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் தடுப்பூசி இயக்கத்தில் இளைஞர்களின் செயல் திறனை சுட்டிக்காட்டிய பிரதமர், இது வெற்றியடைவதற்கான மன உறுதிக்கு ஆதாரம் என்பதோடு இளைஞர்களிடையே காணப்படும் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்

இந்த அரசாங்கம் புதல்வர்களும் புதல்விகளும் சமமானவர்கள் என்று நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதை மனதில் வைத்துக்கொண்டு, புதல்விகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களின்  திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதல்விகளும் தங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும், அதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், இந்த பயணத்தில் இது மிக முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் தங்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாத பல போராளிகளை நாம் பெற்றுள்ளோம் என்று பிரதமர் கூறினார். இதுபோன்ற மாண்புமிகு மனிதர்களைப் பற்றி நமது இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, ஆய்வுசெய்கிறார்களோ  அந்தளவுக்கு நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றார் பிரதமர். தூய்மைக்கான இயக்கத்தில் இளைஞர்கள் குரல் கொடுத்து பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய இளைஞர் விழாவானது இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைத்து தேசத்தை கட்டமைக்க, அவர்களை ஒன்றுபட்ட சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமூக ஒருங்கிணைப்புஅறிவுசார் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுவந்து, அவற்றை 'ஒரே பாரதம், ஒன்றுபட்ட பாரதம்என்ற ஒன்றுபட்ட திட்டத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***************


(Release ID: 1789336) Visitor Counter : 298