நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வருமான வரி தாக்கல் மற்றும் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

Posted On: 11 JAN 2022 5:52PM by PIB Chennai

கொரோனா காரணமாகவும், பல அறிக்கைகளை மின்னனு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள்  குறித்து வரி செலுத்துவோர் மற்றும் இதர தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பலவிதமான தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) முடிவு செய்தது.

1.2020-2021ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30 ஆக இருந்தது. பின்னர் இது 2021 அக்டோபர் 31ம் தேதியாகவும் மற்றும் 2022 ஜனவரி 15ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான கடைசி தேதி 2022 பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.2020-2021ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31ம் தேதியாக இருந்தது. தற்போது இதற்கான கடைசி தேதி 2022 பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது

3. 2020-21ம் ஆண்டில் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் அறிக்கையை கணக்காளர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, 2021 அக்டோபர் 31ம் தேதியாக இருந்தது. பின்பு இது 2021 நவம்பர் 30ம் தேதியாகவும் மற்றும் 2022 ஜனவரி 31ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கடைசி தேதி 2022 பிப்ரவரி 15ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

4. 2021-2022 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31ம் தேதியாக  இருந்தது. பின்னர் இது 2021 நவம்பர் 30ம் தேதியாகவும் மற்றும் 2022 பிப்ரவரி 15ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது 2022 மார்ச் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5. 2021-2022 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 நவம்பர் 30ம் தேதியாக  இருந்தது. பின்னர் இது 2021 டிசம்பர் 31ம் தேதியாகவும் மற்றும் 2022 பிப்ரவரி 28ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது 2022 மார்ச் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கைகளை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789146

***********(Release ID: 1789210) Visitor Counter : 198