அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பெங்களூரைச் சேர்ந்த ஸ்வர்ணஜெயந்தி ஆய்வாளர் உயர் வெப்பநிலை சூப்பர் கண்டக்டர்கள் தொடர்பான உலோகங்களைப் பற்றிய தத்துவார்த்த புரிதல் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்

Posted On: 11 JAN 2022 2:40PM by PIB Chennai

குவாண்டம் இயற்பியலாளர்களின் தரநிலைகளின் படி கூட, விசித்திரமான உலோகங்கள் வித்தியாசமானவை. இந்த பொருட்கள் உயர்-வெப்பநிலை சூப்பர் கண்டக்டர்களுடன் தொடர்புடையவை என்பதோடு கருந்துளைகளின் பண்புகளுடன் வியக்கத்தக்க இணைப்புக்களைக் கொண்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையத்தின் இணைப் பேராசிரியரும், 2020-2021 ஸ்வர்ணஜெயந்தி ஊக்கத்தொகை பெற்றவருமான பேராசிரியர் சுப்ரோ பட்டாச்சார்ஜி, இந்த புதிய மற்றும் குறிப்பிடப்படாத குவாண்டம் பொருட்களின் எல்லையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

பொருளின் மின்னணு கட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த பொருட்களுக்குள் உள்ள பல ஊடாடும் எலக்ட்ரான்களின் கூட்டு நடத்தை போன்ற குவாண்டம் அமைப்புக்களில் உள்ள புதிய பண்புகளின் மிகுதியைப் புரிந்துகொள்வதற்கான பொதுவான முன்னுதாரணத்தை வழங்க அவர் பணியாற்றுகிறார்.

குவாண்டம் இயக்கவியலின் நுட்பமான இடையீடு மற்றும் பொருளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களுக்கு இடையேயான தொடர்பு காரணமாக காந்தங்கள், செமி கண்டக்டர்கள் மற்றும் சூப்பர் கண்டக்டர்களை அவை உருவாக்குகின்றன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிறுவப்பட்ட ஸ்வர்ணஜெயந்தி உதவித்தொகையின் ஆதரவுடன் கூடிய ஆராய்ச்சி, விசித்திரமான உலோகங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பேராசிரியர் சுப்ரோ பட்டாச்சார்ஜியை subhro@icts.res.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789111

***************



(Release ID: 1789155) Visitor Counter : 154