திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் ஆண்டு இறுதி அறிக்கை
Posted On:
10 JAN 2022 3:21PM by PIB Chennai
பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டம் 3.0 (2020-21)
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் தனது முன்னணி திட்டமான 3ம் கட்ட பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தை 2021 ஜனவரியில் தொடங்கியது. இத்திட்டம் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப, நாடு முழுவதும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்தும்.
பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் பிரதான நோக்கங்கள்:
* திறன் மேம்பாட்டு பயிற்சி கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை இளைஞர்களுக்கு தெரிவிக்கும் சூழலை உருவாக்கும்.
* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும், சான்றிதழ் பெறவும் இளைஞர்களுக்கு தேவையான உதவியை அளிக்கும்.
* தனியார் துறையினர் அதிகம் பங்குபெறுவதற்கான நிலையான திறன் மேம்பாட்டு மையங்களை ஊக்குவிக்கும்.
நாடு முழுவதும் 8 லட்சம் இளைஞர்களுக்கு பயனளிக்கும்.
இதுவரை, பிரதமரின் கவுசல் விகாஸ் 3.0 திட்டத்தின் கீழ் 3.74 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 3.36 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 2.23லட்சம் பேர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 1.65 லட்சம் பேருக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கவுசல் விகாஸ் 3.0 திட்டத்தின் கீழ் கொவிட் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி
மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரிப்பை ஈடுசெய்யவும், தற்போதுள்ள மருத்துவ பணியாளர்களின் சுமையை குறைப்பதையும் இந்த பயிற்சி திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பயிற்சி திட்டம் கீழ்கண்ட 3 அம்சங்களை உள்ளடக்கியது:
முதல் அம்சம்: சுகாதார துறையில் பணிகளுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பயிற்சி. இதில் 21 நாள் பயிற்சி வகுப்புகளும், மருத்துவ மனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில் 90 நாட்கள் பயிற்சி.
2வது அம்சம்: முன்அனுபவம் உள்ளவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
3வது அம்சம்: திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஓட்டுநர்களுக்கான 27 நாள் பயிற்சி.
இந்த திட்டம் பிரதமரால் கடந்த 2021 ஜூன் 18ம் தேதி அன்று 111பிரதமரின் கவுசல் மையங்களில் தொடங்கப்பட்டது.
இதேபோல் நெசவாளர்கள், கைவினை கலைஞர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. ஐடிஐக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அளிக்கப்பட்ட பயிற்சி விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788919
**********
(Release ID: 1788983)
Visitor Counter : 634