குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜனவரி 14 முதல் கையால் செய்யப்பட்ட காகித காதி காலணிகளை அணிய உள்ளனர்
Posted On:
10 JAN 2022 4:42PM by PIB Chennai
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் நூற்றுக்கணக்கான கோவில் பணியாளர்களும் இனி வெறும் காலுடன் கோவில் வளாகத்திற்குள் நுழைய வேண்டியதில்லை.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையால் செய்யப்பட்ட காதி காகித காலணிகளை பக்தர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஜனவரி 14 முதல் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்க உள்ளது. காசி விஸ்வநாதர் வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள காதி விற்பனை மையத்தில் இந்த காலணிகள் கிடைக்கும்.
வாரணாசியில் உள்ள பதிவுபெற்ற காதி அமைப்பான காசி ஹஸ்த்கலா பிரதிஸ்தான்
ஒரு ஜோடி செருப்பு ரூபாய் 50 என்ற விலையில் விற்க உள்ளது. காகிதங்களைக் கொண்டு கைகளால் காலணிகளை தயாரிக்கும் மையம் பொங்கல் தினமான (மகர் சங்கராந்தி) 2022 ஜனவரி 14 அன்று காசி விஸ்வநாதர் கோவிலின் தலைமை அர்ச்சகரால் திறந்து வைக்கப்படும்.
கோவிலில் வேலை செய்யும் பெரும்பாலான பணியாளர்கள் வெறும் கால்களால் வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சணலால் செய்யப்பட்ட காலணிகளை அவர்களுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைகளால் செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகித காலணிகள் கோவிலின் புனிதத்தை பேணும் அதே சமயத்தில், வெப்பம் மற்றும் குளிர் போன்ற கடுமையான வானிலை நிலவரங்களிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் என்று காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788938
************
(Release ID: 1788981)
Visitor Counter : 193