தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூஸ் ஆன் ஏர் செயலி மூலம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்களின் எண்ணிக்கை டிசம்பரில் 2 மில்லியின் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 10 JAN 2022 12:30PM by PIB Chennai

நியூஸ் ஆன் ஏர் செயலில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2021 டிசம்பரில்  2 மில்லியன் அதிகரித்து 18 மில்லியனாக உயர்ந்துள்ளது. வானொலி உலகில் இந்த அளவுக்கு நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதுவே முதல் முறை.

நகரங்கள் வாரியாக, அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளின் நேரடி ஒலிபரப்பை கேட்கும்  மாதாந்திர நேயர்களின் எண்ணிக்கை புனே, பெங்களூரு, இந்தூர் மற்றும் நாக்பூரில் மில்லியன்களாகவும், பாட்னா, லக்னோ மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் நேயர்களின் எண்ணிக்கை மில்லியனை நெருங்கியுள்ளது.

நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரடி நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ள நகரங்களின் பட்டியலில் எர்ணாகுளத்தை பின்னுக்கு தள்ளி ஜெய்ப்பூர் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் அகில இந்திய வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளின் தரவரிசை பட்டியலில் மும்பை மீண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது.

மற்ற நகரங்களின் தரவரிசை பட்டியலையும், முதல் 10 நகரங்களில் மாதாந்திர நேயர்கள் எண்ணிக்கை விவரத்தையும் கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

அகில இந்திய வானொலியின் 240க்கும்  மேற்பட்ட சேவைகள், நியூஸ் ஆன் ஏர் செயலில் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் நேயர்கள் கேட்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788866

**************


(रिलीज़ आईडी: 1788973) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu