வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலகளாவிய புதுமைகள் குறியீட்டில் முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு செல்வது நமது லட்சியமாக இருக்க வேண்டும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
10 JAN 2022 2:21PM by PIB Chennai
உலகளாவிய புதுமைகள் குறியீட்டில் இந்தியாவை முதல் 25 இடங்களுக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்ய புதுமை சூழலியலின் பங்குதாரர்களுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர், திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார்.
உலகளாவிய புதுமைகள் குறியீட்டில் 2014-ல் 76-ம் இடத்தில் இருந்த இந்தியா 2021-ல் 46-ம் இடத்திற்கு முன்னேறியதற்கு நமது புது நிறுவனங்களே (ஸ்டார்ட்அப்) முக்கிய காரணம் என்று திரு கோயல் கூறினார்.
“ஸ்டார்ட்அப் இந்தியா புதுமைகள் வாரத்தை” புதுதில்லியில் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார். முதல் ஸ்டார்ட்அப் புதுமைகள் வாரத்தில் பங்கேற்றதற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திரு கோயல், விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக புதுமை சூழலியலை கொண்டாடுவது, நமது ஸ்டார்ட்அப்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பு என்றும் கூறினார்.
ஸ்டார்ட்அப் வாரக் கொண்டாட்டங்களை வருடாந்திர நிகழ்வாக நிறுவனமயமாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அமைச்சர் பேசினார், இதன் மூலம் நமது ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மதிப்பாய்வு செய்து, புதுப்பித்து, புத்துயிர் அளித்து மறுசீரமைக்க முடியும். நமது தொழில்முனைவோரைக் கொண்டாடும் வேளையில் எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை வகுத்துக்கொள்வதற்கான கண்ணோட்டத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டின் முன்னணி புதிய நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுதலை வழங்குபவர்கள், நிதி வழங்கும் அமைப்புகள், வங்கிகள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் மற்றும் இதர தேசிய/சர்வதேச பங்குதாரர்களை ஒன்றாக இணைப்பதே இந்த ஸ்டார்ட் அப் மற்றும் புதுமைகள் திருவிழாவின் முதன்மை நோக்கமாகும்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகள் உள்ளிட்டவை ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும். பல்வேறு அமர்வுகள் இந்த விழாவின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788900
**************
(Release ID: 1788968)
Visitor Counter : 250