நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் (09.01.2022 வரை) 532.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 10 JAN 2022 5:10PM by PIB Chennai

கடந்த ஆண்டுகளைப் போலவே 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், உள்ளிட்ட கொள்முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் (09.01.2022 வரை) 532.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,04,441.45 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 64.07 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் 10.01.2022 நிலவரப்படி 703388 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1378.64 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 1.01218 விவசாயிகள்  பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2020-21-ல் இதே காலத்தில் 4490222 மெட்ரிக் டன்  நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.8477.54 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 852152 விவசாயிகள் பயனடைந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788943

*************** 


(Release ID: 1788959) Visitor Counter : 202