சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஹஜ் புனித பயண திட்ட பயிற்சியாளர்களுக்கான 2 நாள் பயிற்சி: மும்பையில் தொடங்கி வைத்தார் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

Posted On: 08 JAN 2022 2:38PM by PIB Chennai

2022 ஹஜ் புனித பயண திட்ட பயிற்சியாளர்களுக்கான  2 நாள் பயிற்சியை மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி திட்டத்தில், பல மாநிலங்களைச் சேர்ந்த 550 பயிற்சியாளர்கள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கலந்து கொள்கின்றனர். கொவிட்-19 தொற்றை முன்னிட்டு, இந்த பயிற்சியில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.  ஹஜ் பயணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி இந்திய ஹஜ் குழு , சவதி அரேபியா, மும்பை நகராட்சி, சுங்கம் மற்றும் குடியுரிமை, விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இந்த பயிற்சியில் விளக்குகின்றனர்.  சவுதிஅரேபியாவில் போக்குவரத்து, தங்குமிடம் மறறும் சவுதி அரேபியா சட்டங்கள் குறித்த தகலும் இதில் அளிக்கப்படும்.  இவற்றை  பயிற்சியாளர்கள் அறிந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள பயிற்சி முகாம்களில்ஹஜ் புனித பயணிகளுக்கு பயிற்சி அளிப்பர்.

மும்பையில் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் கூறுகையில், புனித பயணிகளின் சுகாதாரம் மற்றும் நலத்துக்கு அதிக முன்னுரிமை அளித்து ஹஜ் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். கொவிட் தொற்றை முன்னிட்டு, ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பம் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதாகவும், இது வெளிப்படையாகவும், சவுகரியமாகவம் இருக்கும் என அவர் கூறினார்.

 

தடுப்பூசி செலுத்தியவர்கள், சவுதி அரேபியா மற்றும் மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில் ஹஜ் 2022 பயணிகள் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஹஜ் 2022 பயணத்துக்கு இதுவரை 51,000-க்கும்  மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் துணையின்றி பயணம் செய்ய விண்ப்பித்துள்ளனர்.

ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் மூலமாக ஹஜ் கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என மத்திய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788554

                                ************


(Release ID: 1788644) Visitor Counter : 226