வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
மணிப்பூர் - திரிபுரா இடைய முதல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் : மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
08 JAN 2022 7:12PM by PIB Chennai
மணிப்பூர் - திரிபுரா மாநிலங்களை அசாம் வழியாக இணைக்கும் முதல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் மணிப்பூர் முதல்வர் திரு நாங்தோம்பம் பிரன் சிங் மற்றும் திரிபுரா முதல்வர் திரு பிப்லப் குமார் தேவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.
மணிப்பூர், திரிபுரா மற்றும் தெற்கு அசாம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை அகர்தலா- ஜிரிபம்-அகர்தலாவை இணைக்கும் சிறப்பு ரயில்கள் ஜன் சதாப்தி தொடக்கம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அகர்தலா மற்றும் ஜிரிமம் ரயில் நிலையங்களில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, ‘‘ முக்கிய நகரங்களை இணைப்பதிலும், பயணிகள் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் இந்த சிறப்பு ரயில்கள் முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் இரு மடங்கு அதிகரித்து ரூ.68,020 கோடியாக உயர்த்தியதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் அளிக்கும் முன்னுரிமை தெளிவாக தெரிகிறது என அவர் மேலும் கூறினார்.
இத்திட்டத்தை விரைவாக முடிப்பதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ரயில்வேத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்தார்.
அகர்தலா - ஜிரிபம் - அகர்தலா ஜன்சதாப்தி விரைவு ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும். அகர்தலாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் - மதியம் 12 மணிக்கு ஜிரிபம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜிரிபம்-லிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் அகர்தலாவுக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788600
*****************************
(Release ID: 1788642)
Visitor Counter : 236