அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்மு & காஷ்மீரில் பெருந்தொற்று ஆயத்த நிலை குறித்து மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆய்வு
Posted On:
08 JAN 2022 4:50PM by PIB Chennai
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பெருந்தொற்று பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்து, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆய்வு செய்துள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், கொவிட் மூன்றாம் அலை தொடர்பான அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். சாமான்ய மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, தொலைபேசி உதவி எண்களை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவோருக்கு, அறிகுறி தென்படாமலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதையும் சுட்டிக்காட்டிய திரு.ஜிதேந்திர சிங், தொற்று பாதிப்பின் தன்மை மற்றும் போக்கு அடுத்த சில வாரங்களில் தான் தெரியவரும் என்றார். தொற்று பாதிப்பை விரைவாகக் கட்டுப்படுத்த, மத்திய அரசும், யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் திரு.ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788567
***************
(Release ID: 1788604)
Visitor Counter : 216