பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படைகளில் சேருவதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் விதமாக, 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 08 JAN 2022 1:18PM by PIB Chennai

“100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படுவது, பெண்கள் ஆயுதப்படைகளில் சேரவும்அவர்கள் தேசப் பாதுகாப்பிற்கு பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பையும் அளிக்கும்என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.   ஜனவரி 08, 2022 அன்று சைனிக் பள்ளிகளில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கிற்கு தலைமை வகித்து பேசிய திரு.ராஜ்நாத் சிங், சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்திருப்பது, பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் , ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் என அரசு நம்புவதாகக் கூறினார்.  புதிய சைனிக் பள்ளிகளை திறப்பது என்ற முடிவு, நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற தங்களது கனவை நனவாக்க பெண்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

நாட்டின் ஓட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு முக்கிய முடிவுகளின் ஒரு பகுதியாகவே, சைனிக் பள்ளிகள் விரிவுபடுத்தப்படுவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.    குழந்தைகளை, நாட்டின் தகுதிவாய்ந்த குடிமக்களாக மாற்றுவதில் சைனிக் பள்ளிகள், முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.  

சமுதாயத்தின் ஒட்டுமொத்த  முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமிட, நாட்டின் இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  

குழந்தைகளை, கல்வி அறிவுடன்உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தார்மீக மற்றும் ஆன்மீக அடிப்படையிலும் மேம்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தி வந்த சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் தொலைநோக்கு சிந்தனைகளை சைனிக் பள்ளிகள் செயல்படுத்தி வருவதற்கும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788536

*****


(Release ID: 1788556) Visitor Counter : 242