சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உத்தரப்பிரதேசத்தில் ரூ. 14169 கோடி மதிப்பிலான 336 கிமீ நீளம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு திரு. நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
Posted On:
07 JAN 2022 3:59PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ரூ. 14169 கோடி மதிப்பிலான 336 கிமீ நீளம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மதுரா-ஹத்ராஸ் - பதோன்--பேரேலி நெடுஞ்சாலை இணைப்பு மூலம் புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து சிக்கல்கள் தீர்க்கப்படும். ஆக்ரா உள்வட்ட சாலை மற்றும் யமுனா விரைவு சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைப்பதன் மூலம் ஆக்ரா நகரம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடும். . ஆக்ரா-ஜலேசர்-எட்டா சாலை பித்தளை தொழில் வியாபாரிகளுக்கு வசதி அளிக்கும்.
ப்ரஜ்யில் 84 கோசி பரிக்ரமா மார்க்கின் மேம்பாட்டையும் திரு. கட்கரி இன்று அறிவித்தார். இந்த வழித்தடம் புதிய தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு பாரத்மாலா திட்ட கட்டம்-2-ல் சேர்க்கப்படும்.
அயோத்தியின் 84 கோசி பரிக்ரமா மார்க் போன்று இந்த பாதை உருவாக்கப்படும் என்றும், அருகிலுள்ள அனைத்து முக்கிய புனிதத் தலங்களுடனும் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மதுராவைத் தவிர, ராஜஸ்தான், ஹரியானா எல்லைப் பகுதிகள் வழியாக இந்த பாதை செல்லும் என்றும் அவர் கூறினார்.
வர்த்தகம் மற்றும் வணிகம் செய்வதை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டங்கள் எளிதாக்கும். கண்ணாடி மற்றும் வளையல் தொழிலுக்கு சிறப்பான உத்வேகம் கிடைக்கும். இந்த நெடுஞ்சாலைத் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788324
****************************
(Release ID: 1788421)
Visitor Counter : 171