ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

3-வது தேசிய தண்ணீர் விருதுகளை அறிவித்தார் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர்


சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு

Posted On: 07 JAN 2022 2:54PM by PIB Chennai

3-வது தேசிய தண்ணீர் விருதுகளை, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், புதுதில்லியில் இன்று அறிவித்தார்.  2020-ம் ஆண்டுக்கான இந்த விருதில், நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்தப் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதல்பரிசையும், ராஜஸ்தான் இரண்டாம் பரிசையும் பெறுகின்றன.  

தென் மாநிலங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் பரிசையும்சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது பரிசையும்சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பிரிவில், காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், புதுச்சேரிஅமலோற்பவம் லூர்து அகாடமி 2-ம் பரிசையும், புதுச்சேரி மனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி 3-ம் பரிசையும் பெற உள்ளன

சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (ஹுண்டாய் கார் தொழிற்சாலை)-க்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.  

விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் அடிப்படையானது என்றார்இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்உலகில் வேகமா வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியாவிற்கு, தண்ணீர் வளம் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்உலகின் மொத்த மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், உலகின் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% தான் இந்தியாவில் உள்ளது என்றும் அவர் கூறினார்.  

தண்ணீர் சுழற்சியில், மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த அங்கம் என்பதால்ஒன்றுபட்ட தேசிய தண்ணீர் விருதை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே  இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் திரு.ஷெகாவத் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தியைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788293

***************


(Release ID: 1788355) Visitor Counter : 386