பாதுகாப்பு அமைச்சகம்
பிரான்ஸ் நாட்டில் நிமஸ் நடத்திய சாகச விளையாட்டுப் பயணத்தில் பங்கேற்ற, இந்தியாவின் முதலாவது பல-பரிமாணக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், வரவேற்றார்
प्रविष्टि तिथि:
07 JAN 2022 2:28PM by PIB Chennai
தேசிய மலையேற்ற மற்றும் அதனைச் சார்ந்த விபளையாட்டுப் பயிற்சி நிறுவனம் (NIMAS) பிரான்ஸ் நாட்டில் நடத்திய, சாகச விளையாட்டுப் பயணத்தில் பங்கேற்றுத் திரும்பிய, இந்தியாவின் முதலாவது பல-பரிமாணக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், ஜனவரி 07, 2022 அன்று வரவேற்றார். இந்தப் பயணம், நவம்பர் 2021-ல் நடத்தப்பட்டு, அதில் ராணுவ வீரர்கள் எட்டு பேரும், அருணாச்சலபிரதேச இளைஞர்கள் நான்குபேர் உட்பட 12பேர்அடங்கிய குழு, நிமஸ் இயக்குனர் கர்னல் சர்பராஸ் சிங் தலைமையில் பங்கேற்றது.
குழுவில் இடம்பெற்று புதுதில்லியில் தங்கியிருந்த சில உறுப்பினர்களுடன் திரு.ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். இந்தக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர், உறுப்பினர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் பயணத்தை நிறைவு செய்ததற்காக பாராட்டும் தெரிவித்தார்.
இந்தக் குழுவினர், ஆல்ப்ஸ் மலைத்தொடரில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளில், 250 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவுக்கு, குளிர்கால மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஆல்ப்ஸ் மலைத் தொடரிலிருந்து இங்கிலீஷ் கால்வாய் வரை 975 கிலோமீட்டர் தொலைவுக்கு உடலை நடுங்கவைக்கும் குளிரில், சராசரியாக, ஒரு நாளைக்கு 09-10மணி நேரம் என்ற அளவிற்கு சைக்கிள் ஓட்டும் பயணத்தையும் மேற்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்- https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788285
***************
(रिलीज़ आईडी: 1788334)
आगंतुक पटल : 336