வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏபிஇடிஏ உதவியுடன் உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி இந்தியாவின் புதிய குவிமையமாக உருவாகி வருகிறது
प्रविष्टि तिथि:
07 JAN 2022 9:36AM by PIB Chennai
வாரணாசி வேளாண் – ஏற்றுமதி குவிமையம் உருவாக்கப்படுவதன் மூலம், உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியை வேளாண் ஏற்றுமதி செயல்பாடுகளுக்கான புதிய பகுதியாக மாற்றுவதற்கு மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், (ஏபிஇடிஏ) பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வாரணாசி வேளாண் – ஏற்றுமதி குவிமையத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தின் திறன் மிக்க மாவட்டங்களை ஏபிஇடிஏ அடையாளம் கண்டுள்ளது. வாரணாசி, மிர்ஸாபூர், ஆசம்கர்க், பிரயாக்ராஜ், உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பூர்வாஞ்சல் கோட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறைவு காரணமாக வாரணாசி பகுதியிலிருந்து மிகக் குறைந்த அளவே வேளாண் பொருட்கள் ஏற்றுமதி இருந்தது. இப்போதைய செயல்பாடுகளால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏபிஇடிஏ தலையீட்டின் காரணமாக கடந்த 6 மாதங்களில், பூர்வாஞ்சல் பகுதியிலிருந்து சுமார் 20,000 மெட்ரிக் டன் வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 5,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள், 15,000 மெட்ரிக் டன் பருப்புவகைகள், இவை அனைத்து வகை போக்குவரத்தையும் பயன்படுத்தி வியட்நாம், வளைகுடா நாடுகள், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788207
***************
(रिलीज़ आईडी: 1788271)
आगंतुक पटल : 315