ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்காக ராஜஸ்தானுக்கு ரூ 6,872 கோடி ஒப்புதல்
प्रविष्टि तिथि:
06 JAN 2022 4:02PM by PIB Chennai
ஜனவரி 5, 2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காக ராஜஸ்தானுக்கு ரூ 6,872.28 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
27 மாவட்டங்களில் பரவியுள்ள 3,213 கிராமங்களில் உள்ள 6.56 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகத்தை இந்தத் திட்டங்கள் வழங்கும். இவற்றில், பல கிராமங்களை உள்ளடக்கிய பெரிய திட்டங்கள் 5 உள்ளன, மீதமுள்ளவை ஒற்றை கிராம திட்டங்களாகும்.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் சுத்தமான குழாய் நீரை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை தூரத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் சிரமத்திலிருந்து விடுவிக்கவும், 2021-22-ல் ராஜஸ்தானுக்கு ரூ 2,345.08 கோடி மத்திய மானியம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதற்காக ரூ. 10,180.50 கோடியை ஒதுக்கியுள்ளார். மாநிலத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட இது நான்கு மடங்கு அதிகமாகும்.
டிசம்பர், 2024-க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்கு மாநிலத்திற்கு முழு உதவி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788004
********************
(रिलीज़ आईडी: 1788182)
आगंतुक पटल : 200