நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சர்க்கரை மேம்பாட்டு நிதி விதிகள் 1983-ன் கீழ், மறுசீரமைப்புக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Posted On: 05 JAN 2022 5:42PM by PIB Chennai

நிதிச்சுமையால் நலிவடைந்த அதேசமயம் பொருளாதார ரீதியில் வாய்ப்புள்ள சர்க்கரை ஆலைகளை மறுசீரமைக்கும் வகையில், சர்க்கரை மேம்பாட்டு நிதி விதிகளின் கீழ் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

சர்க்கரை மேம்பாட்டு நிதிச் சட்டம் 1982-ன் கீழ் கடன் பெற்ற சர்க்கரை ஆலைகளின் எஸ்டிஎப் கடன்களை மறுசீரமைக்க உணவு மற்றும் பொது விநியோகத்துறை 03.01.2022 அன்று இந்த விதிமுறைகளை வெளியிட்டது.  முழுமையான விதிமுறைகள் https://dfpd.gov.in/sdfguidelines-sdf.htm, https://sdfportal.in என்ற தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

30.11.2021 நிலவரப்படி நிலுவையில் உள்ள எஸ்டிஎப் கடன்கள் ரூ.3,068.31 கோடியாகும்.  இதில் ரூ.1,249.21 கோடி அசல். ரூ.1,071.30 கோடி வட்டியாகும்.  ரூ. 747.80 கோடி கூடுதல் வட்டி.

கூட்டுறவு, தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான நிறுவனங்களும் பெற்றுள்ள எஸ்டிஎப் கடன்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787743

***************

 



(Release ID: 1787769) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Marathi