நிதி அமைச்சகம்

ஜியோமி டெக்னாலஜி இந்தியா நிறுவனம் ரூ.653 கோடி சுங்கவரி ஏய்ப்பு

Posted On: 05 JAN 2022 4:13PM by PIB Chennai

ஜியோமி டெக்னாலஜி இந்தியா நிறுவனம் ரூ.653 கோடி சுங்கவரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஜியோமி இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஜியோமி இந்தியா நிறுவனம், குவால்காம் யுஎஸ்ஏ மற்றும் பீஜிங் ஜியோமி மொபைல் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்படி  காப்புரிமை தொகை  மற்றும் உரிமம் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கட்டணம் செலுத்தியது தொடர்பாக ஜியோமி இந்தியா நிறுவன இயக்குனர்கள் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த கட்டணங்கள், ஜியோமி இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்த பொருட்களின் பரிமாற்ற மதிப்பில் சேர்க்கப்படவில்லை. இது சுங்கசட்டத்தின் 14வது பிரிவின் படி விதிமுறை மீறல்.  இதன் மூலம் ஜியோமி இந்தியா நிறுவனம் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது.

ஜியோமி இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்த எம்.ஐ பிராண்ட் செல்போன்கள் அல்லது பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செல்போன்களை ஜியோமி இந்தியா நிறுவனம் விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது.

விசாரணை முடிவுக்குப்பின், கடந்த 01.04.2017 முதல்  30.06.2020 வரை, ஜியோமி இந்தியா நிறுவனம் ரூ. 653 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குரகம் நோட்டீஸ்கள் வழங்கின. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787686

***********



(Release ID: 1787761) Visitor Counter : 258