பாதுகாப்பு அமைச்சகம்

எல்லை சாலைகள் அமைப்பின் சாதனை

Posted On: 04 JAN 2022 6:05PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத்தை நாட்டின் இதரப் பகுதியுடன் இணைக்கும் 11,649 அடி உயரத்தில் உள்ள சோஜி லா மலைக்கணவாயை எல்லைச்சாலைகள் அமைப்பு எட்டி சாதனைப் படைத்துள்ளது. முதல் முறையாக இந்தக் கணவாய் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னரும் திறந்துள்ளது.

விஜயக், பீகான் என்னும் முன்னணி திட்டங்கள் மூலம் எல்லைச்சாலைகள் அமைத்து இந்த சாதனையை எட்டியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பதுடன், லடாக்கின் சமூக பொருளாதார நலத்தையும் இவை காக்கின்றன. கடந்த 2020-ஆம்  ஆண்டிலும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இது திறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மோசமான வானிலை சூழலில், உள்ள இந்த கணவாயை படிந்திருக்கும் பனியை அகற்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது இது திறந்துள்ளது.

2022-ம் ஆண்டின் முதல் மூன்று நாட்களில் இந்த கணவாய் வழியாக 178 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

எல்லைச் சாலை அமைப்பின் இந்த முயற்சியை லடாக் யூனியன்பிரதேச நிர்வாகமும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787454

 

***************



(Release ID: 1787487) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Marathi , Hindi