வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தில் இயங்கும் சுய உதவிக்குழுவின் வெற்றி கதை.

Posted On: 04 JAN 2022 2:43PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் பகுதியில் உள்ள போர்டும்சாவில் ஜாஸ்மின் சுய உதவிக்குழு கூட்டமைப்பு நெர்கார்ம்ப் திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இக்கூட்டமைப்பில் மொத்தம் 16 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. 2019-ல், இத்திட்டத்திலிருந்து சுழல் நிதியாக ரூ. 193,939-ஐ கூட்டமைப்பு  பெற்றது. இந்தத் தொகையின் மூலம், தங்கள் வட்டாரத்தில் பூச்செடி மையங்கள் இல்லாததால், வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக இவர்கள் மலர் வளர்ப்பை தொடங்கினார்கள்.

மலர் வளர்ப்பு தவிர, பாக்கு வளர்ப்பும் அவர்களது வருமானம் ஈட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சிறிய அளவிலான வணிகத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை ஒவ்வொரு சுய உதவிக்குழு உறுப்பினரும் செய்து வருகின்றனர்.

 

உள்ளூர் நிகழ்வுகளில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியதன் மூலம், குறுகிய காலத்தில் இந்த நர்சரி அந்த வட்டாரத்தில் புகழ் ஈட்டியது. மலர் செடிகள் உள்ளிட்டவற்றை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர்.

அருணாச்சலப் பிரதேச மாநில தினம், கிராமப்புற பொருட்காட்சி, திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த கூட்டமைப்புக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிறிய முதலீட்டில் கிடைக்கும் லாபத்துடன் தங்கள் முன்முயற்சியில் உறுப்பினர்கள் பெரிதும் திருப்தி அடைந்துள்ளனர். இந்த முன்முயற்சி, சுய உதவிக்குழுக்களுக்கு லாபகரமான வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787377

*****



(Release ID: 1787417) Visitor Counter : 181