பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிரதமரின் உயர்சிறப்பு விருதுக்கான கருத்து மற்றும் வடிவம் 2014 முதல் புரட்சிகரமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்.
Posted On:
03 JAN 2022 5:47PM by PIB Chennai
பிரதமரின் உயர்சிறப்பு விருதுக்கான இணையதளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார். விருதுக்கான பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரின் உயர்சிறப்பு விருதுக்கான கருத்து மற்றும் வடிவம் 2014 முதல் புரட்சிகரமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது என்றார். 2021-2022-ம் ஆண்டில் பொது நிர்வாகத்தில் பிரதமரின் உயர் சிறப்பு விருதுக்கான இணையதளம் www.pmawards.gov.in ஆகும்.
மக்கள் பங்களிப்புக்கான பிரதமரின் அழைப்புக்கு மக்கள் பதிலளித்துள்ளதன் மூலம் இந்தியாவின் ஆட்சி மாதிரி மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றுங்கள் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதைக் குறிப்பிட்ட டாக்டர். ஜிதேந்திர சிங், சாதாரண மக்களின் "வாழ்க்கையை எளிதாக்குவதற்கு" அதிகாரிகள் உதவ வேண்டும் என்றார்.
டாக்டர். ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், 2014-க்குப் பிறகு, பிரதமரின் உயர்சிறப்பு விருதுக்கான செயல்முறை மற்றும் தேர்வு நிறுவனமயமாக்கப்பட்டது என்றார்.
விருது பெற்ற மாவட்டம்/அமைப்புக்கு இந்த ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விருதுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787170
***********
(Release ID: 1787232)