குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்ட குடியரசு துணைத்தலைவர், தற்சார்பு இந்தியாவின் மாபெரும் அடையாளமாக அது திகழ்வதாக புகழாரம்

Posted On: 02 JAN 2022 6:46PM by PIB Chennai

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கொச்சியில் இன்று பார்வையிட்டார்.

 

இந்தியாவின் மாபெரும் அடையாளமாக அது திகழ்வதாக புகழாரம் சூட்டிய அவர், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலுக்கான தேசத்தின் கனவு நனவை ஐஎன்எஸ் விக்ராந்த் நனவாக்கி உள்ளதாக கூறினார்.

 

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு மது எஸ் நாயர் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கப்பலின் கட்டுமான செயல்முறை குறித்து திரு நாயுடுவிடம் விளக்கினர். 

 

கொச்சியில் உள்ள டிஆர்டிஓவின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் பின்னர் நடந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நாயுடு, ஐஎன்எஸ் விக்ராந்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அது ஒரு 'தொழில்நுட்ப அற்புதம்' என்றும் கூறினார்.

 

விமானம் தாங்கி கப்பலை உருவாக்குவதில் இந்திய கடற்படைக்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை திரு நாயுடு பாராட்டினார்.

 

கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், கேரள அரசின் தொழில் துறை அமைச்சர் திரு பி ராஜீவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786954

****(Release ID: 1786991) Visitor Counter : 138