பாதுகாப்பு அமைச்சகம்

ஐஏசி (பி-71)/விக்ராந்தை குடியரசு துணைத்தலைவர் பார்வையிட்டார்

Posted On: 02 JAN 2022 5:32PM by PIB Chennai

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ள உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான (ஐஏசி) விக்ராந்தை 2022 ஜனவரி 02 அன்று குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பார்வையிட்டார்.

 

திட்டத்தின் தனித்தன்மை மற்றும் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து குடியரசுத் துணைத் தலைவருக்கு விளக்கப்பட்டது. இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் நினைவாக 2022 ஆகஸ்ட் மாதத்திற்கு முன் கப்பலை இயக்குவதற்கான முயற்சிகள் குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது.

 

விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து நிர்மாணிப்பதில் தேசத்தின் திறனை குடியரசு துணைத்தலைவர் பாராட்டியதுடன், தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கான நமது தேடலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனப் பாராட்டினார்.

 

இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு வலிமையான கடல்சார் சக்தியாகும்; அதன் செயல்பாடுகளின் மையமாக விமானம் தாங்கி போர்க் குழு உள்ளது. இந்தியக் கடற்படைக்கு விக்ராந்த் வலுவூட்டுவதோடு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான சக்தி வாய்ந்த ஊக்கியாகவும் செயல்படும்.

 

சுதேசி விமானம் தாங்கி கப்பலை நிர்மாணிப்பதன் மூலம், விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து கட்டமைப்பதற்கான திறன் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786945

****



(Release ID: 1786974) Visitor Counter : 228


Read this release in: English , Urdu , Hindi , Telugu