மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திரு. தர்மேந்திர ப்ரதான் “வாசியுங்கள் இந்தியா” என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை தொடங்கினார்.
"இளம் நண்பர்கள்" அவர்களின் வாசிப்புப் பட்டியலைப் பகிர வேண்டும் : மத்திய அமைச்சர்.
Posted On:
01 JAN 2022 3:27PM by PIB Chennai
‘வாசியுங்கள் இந்தியா” என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர ப்ரதான் தொடங்கி வைத்தார். உள்ளூர்/தாய்மொழி/பிராந்திய/பழங்குடி மொழிகளில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ற புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அடிப்படையில் இந்த 100 நாட்கள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
100 நாள் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கற்றலை உறுதி செய்வதற்கு குழந்தைகள் வாசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார். வாசித்தலே கற்றலின் அடித்தளம் என்பதை அவர் வலியுறுத்தினார், இது மாணவர்களை சுதந்திரமாக புத்தகங்களைப் படிக்கத் தூண்டுகிறது. அது படைப்பாற்றல், விமர்சன சிந்தனைகளை வாய்மொழியிலும் எழுத்திலும் வெளிப்படுத்தும் திறனை வளர்க்கிறது.
திரு. ப்ரதான் தான் படிக்க தேர்ந்தெடுத்த 5 புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்தார். புத்தகம் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு அனைவரையும் ஊக்குவித்த அவர், தாங்கள் படிப்பதை ஆலோசனைகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
‘வாசியுங்கள் இந்தியா” இயக்கம் அங்கன்வாடியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை மையமாகக் கொண்டது. வாசிப்பு இயக்கம் 100 நாட்களுக்கு (14 வாரங்கள்) ஜனவரி 1, 2022 முதல் 10 ஏப்ரல், 2022 வரை நடைபெறும். குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயம், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவில் அனைத்து பங்குதாரர்களும் இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்பர்.
இந்த 100 நாட்கள் வாசிப்பு இயக்கம் தாய்மொழி/உள்ளூர்/பிராந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தும். இந்த வகையில், சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 21ம் தேதியும் இந்த பிரச்சாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அவர்களின் தாய்மொழி/உள்ளூர் மொழியில் வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் ‘உங்கள் மொழியில் கதை வாசியுங்கள்’ என்ற கருப்பொருளைக்கொண்டு இந்த நாள் கொண்டாடப்படும்.
****
(Release ID: 1786820)
Visitor Counter : 428