வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

‘நகர்ப்புற புவிசார் தகவல் போட்டி-2022’: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது

Posted On: 31 DEC 2021 7:14PM by PIB Chennai

இந்தியாவின் நகர்ப்புற சூழலில் புதுமையை ஊக்குவிக்கவும், புவிசார் தொழில்நுட்பங்களை பின்பற்றவும், நகர்ப்புற புவிசார் தகவல் போட்டியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிவுரு நகரங்களுடன் இணைந்து இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி அதிக தரமான புவிசார் தகவல்களை தெரிவிக்கும். இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு தேசிய புவிசார் முகமைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நுகர்வோர் சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் 1000-க்கும் மேற்பட்ட புவிசார் தரவுகளை பயன்படுத்தி, அறிவுப்பூர்வமான தகவல் கதைகளை உருவாக்கலாம். 

 

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, பொலிவுரு நகரங்கள்:

 

'பொலிவுரு நகரமயமாக்கல்’ குறித்த கருத்தரங்கம் சூரத் நகரில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைப்பெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த புவிசார் தகவல் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஜனவரி 1 ஆம் தேதி(நாளை) தொடங்கி மாத இறுதியில் முடிவடைகிறது.  இதற்கு இதுவரை 800 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டிக்கான விவரங்களை https://urbanhack.niua.org/ என்ற இணையளத்தில் காணலாம்.

 

போட்டியில் பங்கேற்கும் புவிசார் நிபுணர்களின் புதுமையான கருத்துக்கள் மற்றும் தீர்வுகள் தொகுக்கப்பட்டு, நகரங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு உதவும்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786650

                                                                                                *******************

 



(Release ID: 1786695) Visitor Counter : 236


Read this release in: English , Urdu , Hindi , Marathi