அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொலை-மருத்துவ தொழில்நுட்பம் இந்தியாவின் எதிர்கால சுகாதார சேவைகள் அமைப்பின் முக்கிய தூணாக விளங்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 31 DEC 2021 4:49PM by PIB Chennai

இந்தியாவின் எதிர்கால சுகாதார சேவைகள் அமைப்பின் முக்கிய தூணாக தொலை-மருத்துவ தொழில்நுட்பம் விளங்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் துறை  இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார்.

 

வாரணாசியில் உள்ள பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இன்று, தொலைநிலை -டிஜிட்டல் மருத்துவ சேவை முன்னோடித்  திட்டத்தைத் தொடங்கி வைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், தொலை-மருத்துவம் போன்ற புதுமையான சுகாதாரத்  தீர்வுகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இந்தியாவால் சேமிக்க முடியும் என்றும் பாதிக்கும் மேற்பட்ட வெளிநோயாளி ஆலோசனைகளுக்கு மாற்றாக இது  அமையும் என்றும் கூறினார்.

 

அனைவருக்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில்  வசிக்கும் ஏழைகளுக்கு, மருத்துவ சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், மலிவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக  பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

 

நாட்டின் தொலைமருத்துவ சேவைகள், நேரில் மருத்துவ ஆலோசனையை பெறுவதை விட 30% செலவு குறைவானவையாக   உள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் தெரிவித்தார்.

 

தொலைமருத்துவ தொழில்நுட்பம் நாட்டில் சில காலமாக நடைமுறையில் இருந்தபோதிலும், கோவிட் நோய்க்கு பிந்தைய காலத்தில் டிஜிட்டல் சுகாதார சூழலியலுக்கு பிரதமர் திரு மோடி அளித்த உந்துதலை தொடர்ந்து ஊக்கம் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786590

                                                                                ***************************

 

 

 

 (Release ID: 1786670) Visitor Counter : 97