மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

2021-ம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயல்பாடுகள்

Posted On: 31 DEC 2021 3:22PM by PIB Chennai

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2021ஆம் ஆண்டில்  பல முக்கிய முடிவுகளை எடுத்தது. அவற்றின் விவரம்:

 

* 2021 அக்டோபர் 31ஆம் தேதி வரை 126 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை ஆதார் வழங்கப்பட்டது.

பொது சேவை மையங்கள், உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் சேவை நெட்வொர்க்காக உள்ளன. ஊரக பகுதிகளில் கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் உள்ளன. நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் 6,467 கூடுதல் பொது சேவை மையங்களும், கிராம பஞ்சாயத்து அளவில் 10,339 பொது சேவை மையங்களும் சேர்க்கப்பட்டன.

 

தேசிய தகவல் மையத்தின்(என்ஐசி) காணொலி காட்சி வசதிகளை பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சரவை செயலாளர்கள் நாடு முழுவதும் விரிவாக பயன்படுத்துகின்றனர். 

 

மெய்நிகர் நீதிமன்றங்கள்:

நீதிமன்றத்தில் கூட்டத்தை குறைப்பதே  மெய்நிகர் நீதிமன்றங்களின் நோக்கம்.  இதன் மூலம் ஒரு நீதிபதியால் மாநிலம் முழுவதும், எந்நேரமும் பணியாற்ற முடியும்.

 

ஆரோக்கிய சேது: இந்த செயலியை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இது  நாடு முழுவதும் கொவிட்-19 பரவலை கண்காணிக்கவும், குறைக்கவும் உதவுகிறது.

 

ஆர்டி-பிசிஆர் மற்றும் ரட்டி செயலிகள்: ஆர்டி-பிசிஆர் மற்றும் ரட்டி செயலிகளை என்ஐசி உருவாக்கியது. இதன் மூலம் நோயாளியின் மாதிரி விவரங்கள் ஐசிஎம்ஆரு-க்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன.

 

பிரதமரின் கிரா டிஜிட்டல் சக்சர்தா திட்டம் ( PMGDISHA):  இத்திட்டம், ஊரக இந்தியாவில் டிஜிட்டல் அறிவை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது. 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் வீட்டுக்கு ஒருவர் வீதம் 6 கோடி குடும்பங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 5.36 கோடி பேர் பதிவு செய்துள்ளனர், இவர்களில் 4.54 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3.37 கோடி பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

 

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல்:

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த 206-17ம் நிதியாண்டில் ரூ.1085  கோடியிலிருந்து, 2020-21-ல் 5,554 கோடியாக அதிகரித்துள்ளது.

 

நாட்டில் மின்னணு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சமீப காலங்களில் பல நடவடிக்கையை எடுத்துள்ளது. 2014ம் ஆண்டு 2-ஆக இருந்த செல்போன் நிறுவனங்கள் தற்போது 256 ஆக அதிகரித்துள்ளது. செல்போன்கள் தயாரிப்பில் உலகளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. செல்போன்கள் உற்பத்தியின் மதிப்பு கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.18,900 கோடியாக இருந்தது. இது 2018-19ம் நிதியாண்டில் ரூ.1,70,000 கோடியாக அதிகரித்தது. தொழிற்சாலைகளுக்கான மின்னணு பொருட்கள், எல்இடி உற்பத்தி மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்களின் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786560

                           ****************************

 



(Release ID: 1786638) Visitor Counter : 247


Read this release in: English , Hindi , Kannada , Malayalam