மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

2021ஆம் ஆண்டில் மீன்வளத்துறையின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள்

Posted On: 30 DEC 2021 3:32PM by PIB Chennai

நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மீன்வளத்துறை முக்கிய இடத்தை வகிக்கிறது. இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் அதிகளவிலான மக்களுக்கு இது ஊட்டசத்து மற்றும் உணவு பாதுகாப்பை வழங்குகிறது. இத்துறை வருவாய் ஈட்டுவதோடு, 28 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

 

கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து மீன்வளத்துறை இத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி இரட்டை இலக்கை அடைந்து 10.87 சதவீதமாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் மீன்வளத்துறை மூலம் 142 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

 

மீன்பிடிப்பதில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இதன் அளவு உலகளவில் 7.56 சதவீதமாக உள்ளது.

மீன்வளத்துறையின் ஏற்றுமதி 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 46,662.85 கோடி.  ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் சாத்தியம் மீன்வளத்துறைக்கு உள்ளது. இதற்காக மீன்வளத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, நிதியுதவியும் அளிக்கப்படுகின்றன.

 

திட்டங்கள்:

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம்: (PMMSY)

இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை 2020ம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்துவதற்கான மொத்த முதலீடு ரூ.20,050 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9,407 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி பயனாளிகளின் பங்களிப்பு ரூ.5763 கோடி.  இத்திட்டத்தை பிரதமர் கடந்த 2020 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

2020-21ம் ஆண்டில் 34 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ரூ.2881.41 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1089.86 கோடி. முதல் தவணையாக ரூ.585.68 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

2021-22ம் ஆண்டில் 16 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ரூ.2600.54 கோடி மதிப்பிலான  வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

 

2021-22 ஆம் ஆண்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் சாதனைகள்:

 

உள்நாட்டு மீன்பிடிப்பு: 2983 ஹெக்டேர் அளவில் குளங்களில் மீன்வளர்ப்பு, 676 பயோபிளாக் மற்றும் 1178 மறுசுழற்சி மீன் வளர்ப்பு முறை, அணைகள் மற்றும் நீர்நிலைகளில் 10,490 கூண்டுகள் மற்றும் 126 ஹெக்டேரில் மீன் வளர்ப்பு, 110 இரால் பண்ணைகள், 79 ஹெக்டேரில் உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

கடலில் மீன்பிடிப்பு:

101 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 260 மீன்பிடி படகுகளை  மேம்படுத்துதல்மீன்பிடி படகுகளில் 1,353 பயோ கழிவறைகள், 890 மீன் வளர்ப்பு கூண்டுகள், 2 மீன் குஞ்சு பொரிப்பகங்கள்,  642 ஹெக்டேரில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

மீனவர்கள் நலன்: மீனவர்களுக்கு 974 படகுகள் மற்றும் மீன்வலைகள் மாற்றித் தரப்பட்டன. மீன்பிடி தடை காலத்தில் 6, 58,462 மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அளிக்கப்பட்டன.

 

கடற்பாசி வளர்ப்பு: 23,000 ரேப்ட் மற்றும் 41,000 ட்யூப் நெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

 

வடகிழக்கு பகுதியில் ரூ.122.50 கோடி மதிப்பிலான மீன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

மீன்வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி:  மீன்வளத்துறைக்கான கட்டமைப்புகளை உருவாக்க மீன்வளத்துறை அமைச்சகம் 2018-19ம் ஆண்டில் பிரத்தியேக நிதியை ரூ.7522 .48 கோடி மதிப்பில் உருவாக்கியது. இதன் மூலம் தகுதியான நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய  நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

 

கிசான் கிரெடிட் கார்டு:

தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின் கீழ் மீனவர்கள் உட்பட 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை கடன்களை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786303

************



(Release ID: 1786419) Visitor Counter : 666