நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

प्रविष्टि तिथि: 30 DEC 2021 5:45PM by PIB Chennai

தேர்தல் பத்திரத் திட்டம் 2018-ல், ஜனவரி 2, 2018 தேதியிட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன்படி, இந்திய குடிமக்கள்தேர்தல் பங்குகளை வாங்கலாம். தனிநபரோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் 29-ஏ பிரிவின் கீழ், பதிவு செய்யப்பட்ட,  கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சிகள் இந்தப் பத்திரங்களைப் பெறுவதற்கு தகுதி உள்ளவையாகும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் தகுதி உள்ள அரசியல் இந்தப் பத்திரங்களை ரொக்கமாக்கிக் கொள்ளலாம்.

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் 01.01.2022 முதல் 10.01.2022 வரை பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்தத் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786345

 

-----


(रिलीज़ आईडी: 1786404) आगंतुक पटल : 354
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu