வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க புகைப்படம் மற்றும் வீடியோ போட்டி: மைகவ் இந்தியாவுடன் இணைந்து வடகிழக்கு மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

Posted On: 29 DEC 2021 5:11PM by PIB Chennai

வடகிழக்கு இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களும், இயற்கை அழகு, நல்ல வானிலை, வளமான பல்லுயிர், அரிய வகை வனவிலங்குகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தனித்துவமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரவேற்கும் குணமுள்ள மக்களை கொண்டுள்ளன. வனப்பகுதி வாழ்க்கை, மதம் மற்றும் கலாச்சார சுற்றுலா, நதியில் படகு பயணம்,கால்ஃப் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு வடகிழக்கு பகுதி மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கிறது.  இங்கு மலையேறும் பயிற்சியிலும் ஈடுபட முடியும்.  விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு, ‘வடகிழக்கு இந்தியா புகைப்பட மற்றும் வீடியோ போட்டிகளை வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.  வடகிழக்கு பகுதியை பிரபல சுற்றுலா தலமாக்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

 

வடகிழக்கு பகுதியிலிருந்து அன்புடன்’  என்ற பிரசாரத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  தனது சமூக ஊடக சேனலில்  இருந்து தொடங்கியுள்ளார்.

இந்த போட்டியின் கருப்பொருள்  - வடகிழக்கு இந்தியா.

இதில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆர்வலர்கள், வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், மக்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், பல்லுயிர், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில்  தங்கள் படைப்புக்களை சமர்பிக்கலாம்.

இதற்கான வழிகாட்டுதல்கள்:

* இந்த போட்டியில் இந்திய மக்கள் அனைவரும்  கலந்த கொள்ளலாம்.

* பிரச்சார காலம்: 2021 டிசம்பர் 20 முதல்…. 2022 ஜனவரி 27ம் தேதி வரை.

* ஒருவர் 5 படைப்புக்களை சமர்ப்பிக்கலாம்.

* போட்டோ மற்றும் வீடியோக்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.

* புகைப்படங்கள் ஜேபிஜி / பிஎன்ஜி மற்றும் எம்.பி 4 வடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் 10 எம்.பி.யை தாண்டக் கூடாது.

* அனைத்து பதிவுகளும் www.mygov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற வழிகளில் அனுப்பினால், பரிசீலிக்கப்படாது. இந்த போட்டியில் இருந்து தேர்வு செய்யப்படும் 3 வெற்றியாளர்கள் தேசிய அங்கீகாரம் பெறுவர்.  வடகிழக்கு பகுதியில் சுற்றுலா செல்வதற்கான சலுகை அளிக்கப்படும்.

போட்டி 2022 ஜனவரி 20ம் தேதி முடிகிறது.

இதற்கான விதிமுறைகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்:

https://innovateindia.mygov.in/destination-north-east-photography-and-videography-contest/

மேலும் விவரங்களுக்கு:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786090

                                                                                ******************

 

 


(Release ID: 1786191) Visitor Counter : 220


Read this release in: English , Urdu , Hindi , Manipuri