நித்தி ஆயோக்
மூங்கில் வளர்ச்சி குறித்த தேசியப் பயிலரங்கை நிதி ஆயோக் நடத்த உள்ளது.
Posted On:
29 DEC 2021 5:16PM by PIB Chennai
நாளை டிசம்பர் 30 அன்று மூங்கில் மேம்பாடு குறித்த ஒரு நாள் தேசிய அளவிலான பயிலரங்கை நிதி ஆயோக் நடத்த உள்ளது.
நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர். ராஜீவ் குமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர். விகே சரஸ்வத் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த் ஆகியோர் பயிலரங்கைத் தொடங்கி வைக்கின்றனர்.
மூங்கில் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும், மூங்கில் துறையின் முழு மதிப்புச் சங்கிலியில் உள்ள விடுபட்ட தொடர்புகளை ஆராய்வதற்கும், அதற்கேற்ப உத்திகள் மற்றும் இத்துறைக்கான எதிர்கால திட்டத்தை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்ட இந்த பயிலரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள்.
பயிலரங்கில் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும். இவை ‘மூங்கில் உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் சர்வதேச அனுபவம்’, ‘அரசு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் வாய்ப்புகள்’, ‘மூங்கில் வட்டப் பொருளாதாரம்’, மற்றும் ‘தேசிய மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள்’ ஆகியவையாகும்.
மூங்கிலின் பயன்பாடு மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, இந்திய மூங்கில் தொழில்துறையின் முழுமையான வளர்ச்சிக்கான நடைமுறைக் கொள்கைகள்/தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் நிதி ஆயோக் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ‘மூங்கில் மேம்பாட்டு பணி ஆவணம்’ என்ற தொழில்நுட்ப வணிக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முழு மூங்கில் மதிப்பு சங்கிலியான- தோட்டம், உற்பத்தி, செயலாக்கம் முதல் தரப்படுத்தல் மற்றும் பயன்பாடு வரை ஆய்வு செய்ய இந்த அறிக்கை திட்டமிட்டுள்ளது.
கிராமப்புறப் பொருளாதாரத்தில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், மதிப்புக் கூட்டலை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்றவாறு மூங்கில் பொருட்களின் பல்வகைப்படுத்துதலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு மூங்கில் துறையின் திறனைப் பயன்படுத்துவதற்கான நிதி ஆயோகின் முயற்சிகள் உதவுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786091
********************
(Release ID: 1786156)
Visitor Counter : 254