நிதி அமைச்சகம்
மேற்பார்வை தொழில்நுட்ப அமைப்புக்கான முன்மொழிவு கோரிக்கையை சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் வெளியிட்டது.
Posted On:
29 DEC 2021 3:18PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள சர்வதேச நிதி சேவை மையங்களில் நிதி பொருட்கள், நிதி சேவைகள் மற்றும் நிதி அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்காக, குஜராத்தின் காந்திநகரில் உள்ள கிஃப்ட்-ஐஎஃப்எஸ்சி-யில் ஒருங்கிணைந்த நிதித் துறை ஒழுங்குமுறை அமைப்பாக சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அதிநவீன தகவல் தொழில்நுட்ப தளம் ஒன்றை நிறுவ சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் முயல்கிறது. பங்குதாரர்கள் வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய, மேற்பார்வையிடப்படும் நிறுவனங்களுக்கான இணக்கச் செலவைக் குறைக்கக்கூடிய, சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தை ஒரு சிறந்த ஒழுங்குமுறையாளராக நிலைநிறுத்தும் வகையிலான மிகச்சிறந்த மேற்பார்வை தொழில்நுட்பம் கொண்ட அமைப்பாக இது திகழ வேண்டும்.
ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களுக்கான நிர்வாக, இணக்க, மேற்பார்வை மற்றும் அமலாக்க கட்டமைப்பை உள்ளடக்கும் வகையில் இந்த அமைப்பு இருக்கும். மேலும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பிற துறைசார் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன், இயந்திரத் தொடர்பு அல்லது ஒருங்கிணைப்பு மூலம் ஒத்துழைக்கவும் இது உதவும்.
இது தொடர்பாக, மேற்பார்வை தொழில்நுட்ப அமைப்பை வடிவமைக்கவும், உருவாக்கவும், செயல்படுத்தவும், இயக்கவும், பராமரிக்கவும் ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்க சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் விரும்புகிறது.
இதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. திட்டக் காலம் 72 மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கிய 12 மாதங்களுக்குள் செயல்படுத்துதல் மற்றும் 60 மாதங்களுக்கான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் தகவல்களுக்கு https://ifsca.enivida.com மற்றும் https://ifsca.gov.in/home/TenderList ஆகிய இணைய முகவரிகளை பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786053
**************
(Release ID: 1786096)
Visitor Counter : 276