பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

2021 ஆண்டு கண்ணோட்டம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம்

Posted On: 27 DEC 2021 6:28PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல்வேறு திட்டங்கள், சட்டம், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், விழிப்புணர்வு மற்றும் கற்றல், ஊட்டச்சத்து, நிறுவன மற்றும் சட்டப்பூர்வ அணுகலை எளிதாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

2021-ம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் முக்கிய முயற்சிகள்/சாதனைகள் பின்வருமாறு:

பெண்களின் திருமண வயது: பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்காக குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) சட்டம் 2021, 21.12.2021 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம்: (பேடீ பசாவ், பேடீ  படாவ்): இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்களை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) சென்றடைந்துள்ளது.

போஷன் டிராக்கர்: துணை ஊட்டச்சத்தின் நிகழ் நேர கண்காணிப்பை உறுதி செய்வதற்கும், உடனடி மேற்பார்வை மற்றும் சேவைகளை நிர்வகிப்பதற்கான தகவல்களை வழங்குவதற்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தில் போஷன் டிராக்கர் கட்டமைக்கப்பட்டுள்ளது. 24.12.2021 நிலவரப்படி, 12.27 லட்சம் அங்கன்வாடிகள் போஷன் டிராக்கரில் தரவுகளைப் பதிவேற்றி வருகின்றன, இதில் சுமார் 9.85 கோடி பயனாளிகள் உள்ளனர்.

மேலும் பெண்களுக்கான 704 ஒற்றை சாளர மையங்கள், நிர்பயா நிதி, குழந்தைகள் உதவி எண்ணின் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785589



(Release ID: 1786092) Visitor Counter : 841