சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மதநல்லிணக்கம், சகிப்புத்தன்மை, அனைத்து மதமும் ஒன்று என்பதுதான் இந்தியாவின் ஆன்மா மற்றும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாட்டின் பலம்: மத்திய அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி .
Posted On:
28 DEC 2021 4:17PM by PIB Chennai
மதநல்லிணக்கம், சகிப்புத்தன்மை, அனைத்து மதமும் ஒன்று என்பதுதான் இந்தியாவின் ஆன்மா என்றும், வேற்றுமையில் ஒற்றுமைதான் நாட்டின் பலம் என்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
‘‘தாரா ஷிகோ இன்று ஏன் முக்கியம்: அவரது படைப்புகள் மற்றும் ஆளுமையை நினைவு கூர்தல்’’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை தில்லியில் உள்ள முஸ்லிம் அலிகர் பல்கலைக்கழகம் இன்று நடத்தியது. இதில் மத்திய அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசியதாவது:
பழமைவாத மற்றும் விரோத அரசியல் தாரா ஷிகோ மரபு பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. மதநல்லிணக்கம், சகிப்புத்தன்மை, அனைத்து மதமும் ஒன்று என்பதுதான் இந்தியாவின் ஆன்மா மற்றும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாட்டின் பலம். தனது வாழ்க்கை முழுவதும், சமூக நல்லிணக்கம் மற்றும் மத ஒற்றுமையின் சுடராக தாரா ஷிகோ விளங்கினார். ஒரு புறம் உலகின் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இந்தியாவில் வசிக்கின்றனர். மற்றொரு புறம் கடவுள் நம்பிக்கையற்றவர்களும் அதிகளவில் நாட்டில் உள்ளனர். இவர்கள் சம அளவிலான அரசியல்சாசன மற்றும் சமூக உரிமைகளுடன் வசிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பலம்தான், ஒரே பாரதம், உன்னத பாரதத்தை உருவாக்குகிறது.
அனைத்து மத பண்டிகைகளும் கொண்டாடப்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்த கலாச்சார பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தகர்க்கும் எந்த முயற்சியும், இந்தியாவின் ஆன்மாவை பாதிக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு .முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785818
************************
(Release ID: 1785910)
Visitor Counter : 251