விவசாயத்துறை அமைச்சகம்

சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவை தற்சார்பாக்குவதே இலக்கு: வேளாண் அமைச்சர் திரு தோமர்.

Posted On: 28 DEC 2021 4:15PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களுக்கான சமையல் எண்ணெய்- எண்ணெய் பனை வணிக உச்சி மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

சமையல் எண்ணெய்களுக்காக புதிதாக தொடங்கப்பட்ட மத்திய நிதியுதவி திட்டம் பற்றிய தகவல்களை விரிவாக பரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் வணிக உச்சி மாநாடுகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இத்திட்டத்தின் இரண்டாவது உச்சி மாநாடு இதுவாகும். வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் மாநாடு இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் குவஹாத்தியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தோமர், சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை குறித்த தேசிய இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வளங்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உறுதியளித்தார்.

பிரதமர் திரு. நரேந்திரமோடியின் தலைமையில், பாமாயில் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்ய அரசு விரும்புகிறது என்று திரு. தோமர் கூறினார். "சுமார் 3 லட்சம் ஹெக்டேர் நிலம் தற்போது பனை எண்ணெய் சாகுபடியின் கீழ் உள்ள நிலையில், நாட்டில் சுமார் 28 லட்சம் ஹெக்டேர் நிலம் எண்ணெய் பனை சாகுபடிக்கு ஏற்றது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 28 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் பனை விவசாயத்தை மேற்கொண்டு இந்தியாவை தற்சார்பாக்குவதே எங்கள் நோக்கம்,” என்றார் திரு தோமர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785817

                                                                                **************



(Release ID: 1785907) Visitor Counter : 252


Read this release in: English , Urdu , Hindi , Telugu