ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக உத்தரகாண்டிற்கு ரூ.360 .95 கோடி மத்திய நிதி வெளியீடு.

प्रविष्टि तिथि: 28 DEC 2021 2:16PM by PIB Chennai

உத்தரகாண்ட்டில் ஜல் ஜீவன் திட்டத்தை விரைவுப்படுத்தும் நோக்கத்துடன், அம்மாநிலத்திற்கு இரண்டாவது தவணையாக ரூ. 360.95 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

2020-21-ல் இதுவரை இரண்டு தவணைகளில் மாநிலத்திற்கு ரூ 721.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த 2021-22-ல் உத்தரகாண்டிற்கு மத்திய நிதி ரூ. 1,443.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 2020-21-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒதுக்கீட்டை விட இது நான்கு மடங்கு அதிகம்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது, இதற்காக ஆகஸ்ட் 2019 முதல், ஜல் ஜீவன் திட்டம் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்புகள் இலக்கை டிசம்பர், 2022-க்குள் எட்ட உத்தரகாண்ட் திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் சுத்தமான குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்கு இந்திய அரசு மாநிலத்திற்கு முழு உதவி வழங்குகிறது.

கடந்த இரண்டு மாதங்களில், உத்தரகாண்டின் 11 மாவட்டங்களில் உள்ள 846 கிராமங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் 58.5 ஆயிரம் வீடுகளுக்கு ரூ. 714 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைதூர நீர் ஆதாரங்களில் இருந்து தினமும் பல மணி நேரம் தண்ணீர் எடுத்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமத்தை இது வெகுவாகக் குறைக்கும்.

ஆகஸ்ட் 15, 2019 அன்று ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்ட போது 1.30 லட்சம் (8.58%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் தண்ணீர் இருந்தது. 28 மாதங்களில், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்க இடையூறுகள் இருந்தபோதிலும், 6.22 லட்சம் (41.02%) வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பை மாநிலம் வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785771

                                                                                **************************


(रिलीज़ आईडी: 1785877) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu