அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் - 2021 ஆண்டு கண்ணோட்டம்

Posted On: 28 DEC 2021 12:56PM by PIB Chennai

2021 ம் ஆண்டு மனித குலத்திற்கு இதுவரை கண்டிராத சவால்களை ஏற்படுத்தியது. இந்த சவால்களை எதிர்கொள்வதில் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையும், அதன் தன்னாட்சி நிறுவனங்களும் இந்தியாவிற்கு பெரிதும் உதவிகரமாக இருந்தன. கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில், அறிவியல் தொழில்நுட்பத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.சுகாதார சேவை, எரிசக்தி சிக்கனம், பருவநிலை மாற்றம், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்த,அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்கின.

 

2021 ல் அறிவியல் தொழில்நுட்ப துறையின் முக்கிய சாதனை அம்சங்கள் :

 

சர்வேதேச அறிவியல் தொழில்நுட்ப தரவரிசை குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம்

உலக அளவில் முதல் 50 புதுமையான பொருளாதாரத்தை பின்பற்றும் நாடுகளில் இந்தியா 46 இடத்திற்கு முன்னேறியுள்ளது.அறிவியல் வெளியீடுகளில் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதுடன், பி எச் டி ஆராய்ச்சி படிப்பை பயில்வோர் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

 

சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இந்தியா தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது

தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் கீழ், டி ஹைதராபாத், தேசிய வேளாண்-உணவு உயிரிதொழில்நுட்ப நிறுவனம் மொஹாலி, அதிநவீன கம்ப்யூட்டர் உருவாக்க மையம் பெங்களூரு மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய 4 இடங்களில் 4 புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட துடிப்புமிக்க ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் 75 நிறுவனங்களில் இதுபோன்ற உயர்செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டர் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அறிவியல்-தொழில்நுட்பத்துறையின் முயற்சிகள், அனைத்து நிறுவனங்களும், அறிவியல் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக மாற்றியுள்ளது

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவியல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தக்கூடிய சினர்ஜிஸ்டிக் பயிற்சித் திட்டம் என்ற பெயரிலான புதிய திட்டம், மனிதவளங்களை மேம்படுத்தி, திறன் மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.  நாட்டில் சிறப்பாக செயல்படும் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் விஞ்ஞானிகளுக்கு அமைப்பு ரீதியாக ஆதரவளிக்கும் அறிவியல் தொழில்நுட்பத்துறை

அறிவியல்-தொழில்நுட்பத் துறையின்,  பெண் அறிவியல் திட்டம், மகளிர் முதுநிலைப் பட்டப்படிப்புக் கல்லூரிகளுக்கு உறுதுணை புரிவதற்கான புதிய முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.  இதன்படி, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, பெண் ஆராய்ச்சியாளர்கள், கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் சமுதாய அதிகாரமளித்தல்

சமுதாயத்திற்கு அதிகாரமளிப்பதற்கான சான்றாகக் கருதப்படும் Tech@75திட்டம், பழங்குடியினர் கவுரவ தினத்தன்று தொடங்கப்பட்டது.   ‘விஞ்ஞான் உத்சவ்‘ எனப்படும் ஓராண்டுகாலத் திட்டம், ஆகஸ்ட், 2022வரை ஒவ்வொரு மாதமும், ஒரு தலைப்பில் கொண்டாடப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்ட குங்குமப்பூ

காஷ்மீர் மட்டுமே இதுவரை, இந்தியாவின் குங்குமப்பூ கின்னமாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு மாநிலங்களிலும் இதனை சாகுபடி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தெற்கு சிக்கிமின் யாங்காங் கிராமத்தில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தற்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் மேகாலயாவின் பாராபானி பகுதிகளிலும் இந்த சாகுபடி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆழ்ந்த தொழில்நுட்பம் அடிப்படையிலான ஆராய்ச்சி

இந்திய ஆராய்ச்சியாளர்கள் விரைவில், தொழில்நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை விரைவில் பெற உள்ளனர்.  

சென்னை ஐஐடி மற்றும் சோனி இந்தியா இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள்

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT) சென்சார் போர்டுகள் வாயிலாக, இந்தியா சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, சென்னை ஐஐடி-யின் பர்வர்தக் தொழில்நுட்ப அறக்கசட்டளையும் சோனி இநிதியா மென்பொருள் மையமும் இணைந்து சம்வேதன்-2021 என்ற ஹேக்கத்தான் போட்டியை நடத்தின. 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785748

*****************



(Release ID: 1785845) Visitor Counter : 285


Read this release in: English , Marathi , Hindi , Malayalam