மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உள்ளூர் மொழிகளிலும் தாய்மொழியிலும் கற்பிக்கப்படும் பொறியியல் கல்வி அதிகாரமளிக்கும் கருவியாக இருக்கும்: திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
27 DEC 2021 6:26PM by PIB Chennai
உள்ளூர் மொழிகளிலும் தாய்மொழியிலும் கற்பிக்கப்படும் பொறியியல் கல்வி அதிகாரமளிக்கும் கருவியாக இருக்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 36-வது இந்திய பொறியியல் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
அறிவியல் மனப்பான்மை மற்றும் வலுவான பொறியியல் திறன்களைக் கொண்ட மக்களின் பூமி இந்தியா என்றும், கட்டமைப்பு பொறியியல், நீர் மேலாண்மை, கடல்சார் பொறியியல் போன்ற அறிவியல் சான்றுகள் நமது நாகரிக வரலாற்றில் உள்ளன என்றும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் பொறியியல் துறையின் பங்கு குறித்தும் அவர் பேசினார்.
தொலைநோக்கு மிக்க தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம், கல்வியை திறன்களுடன் ஒருங்கிணைத்து, பலதரப்பட்ட அணுகுமுறையை மேற்கொண்டு, 21-ம் நூற்றாண்டிற்கு நமது இளைஞர்களை தயார்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
புதிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க உள்ளூர் மொழிகளிலும் தாய்மொழியிலும் பொறியியல் கல்வி என்பது நமது இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக இருப்பதோடு, நமது பொறியியல் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785587
************
(Release ID: 1785632)
Visitor Counter : 140