பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ் நினைவு விரிவுரை நடைபெற்றது

Posted On: 27 DEC 2021 5:59PM by PIB Chennai

ஜெனரல் கே.வி. கிருஷ்ணாராவ் நினைவு விரிவுரையின் மூன்றாவது பதிப்பு 27 டிசம்பர் 2021 அன்று புதுதில்லியில் உள்ள யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் இந்திய ராணுவத்தின் மஹர் ரெஜிமென்ட்டால் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்த நிகழ்வில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு எதிர்காலம்என்ற தலைப்பில் ராணுவப் பயிற்சி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா பேசினார். பெருகி வரும் தகவல் தொழில்நுட்பங்களால் போர்முறையில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களைக் குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அத்தகைய இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

 

அதிகரித்து வரும் கலப்பினப் போரின் காலம் குறித்து எடுத்துரைத்த அவர், வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தொழில் வல்லுநர்களும், பொதுமக்களும் போரின் எல்லைக்குள் இப்போது வந்துள்ளனர் என்று கூறினார்.

 

தொடக்க உரையாற்றிய மஹர் படைப்பிரிவின் கர்னல் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா, 'சிப்பாய் ஜெனரல்' என்று அழைக்கப்படும் ஜெனரல் கே வி கிருஷ்ணா ராவுக்கு புகழாரம் சூட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785573

*************


(Release ID: 1785629) Visitor Counter : 188
Read this release in: English , Urdu , Hindi