சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்க ஆறு மாத காலத்திற்குள் ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் மற்றும் கலப்பு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திரு நிதின் கட்கரி அழைப்பு

Posted On: 27 DEC 2021 5:19PM by PIB Chennai

இந்தியாவின் பெட்ரோலிய இறக்குமதிக்கு மாற்றை உருவாக்கவும், விவசாயிகளுக்கு நேரடியான பலன்களை வழங்கவும், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்க ஆறு மாத காலத்திற்குள் ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் மற்றும் கலப்பு மின்சார வாகனங்களை இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரின் தற்சார்பு இந்தியா லட்சியத்தின் படியும் எத்தனாலை போக்குவரத்து எரிபொருளாக மேம்படுத்துவதற்கான அரசின் கொள்கையின் படியும், ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் 100% பெட்ரோல் அல்லது 100% பயோ-எத்தனால் மற்றும் அவற்றின் கலவையில் இயங்கும் திறன் கொண்டவை ஆகும். கலப்பு மின்சார வாகனங்கள் வலுவான கலப்பு மின்சார தொழில்நுட்பத்தில் இயங்கும்.

 

2030-ம் ஆண்டிற்குள் மொத்த கரியமில உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் குறைக்க காப்-26 பருவநிலை மாநாட்டில் செய்யப்பட்ட உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்தியாவிற்கு உதவும் வகையில், வாகனங்களில் இருந்து வெளிவரும் பசுமை இல்ல வாயுக்களை இந்த நடவடிக்கையானது வெகுவாகக் குறைக்கும் என்று திரு கட்கரி கூறினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785557

*********(Release ID: 1785608) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi , Telugu