சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைச் செய்திகள்
இடுகை இடப்பட்ட நாள்:
27 DEC 2021 9:26AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 141.70 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 75,841.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.22 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.40 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்கு பின் இது மிக அதிகமான அளவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 7,141 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,37,495 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.87, இது கடந்த 84 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 0.63 ஆகும். இது கடந்த 43 நாட்களில் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 67.29 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 578 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக தில்லியில் 142 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 141 பேருக்கு தொற்று ஏற்பட்டு தில்லியில் 23 பேரும், மகாராஷ்டிராவில் 42 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785406
****
(வெளியீட்டு அடையாள எண்: 1785454)
வருகையாளர் எண்ணிக்கை : 250