சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
Posted On:
26 DEC 2021 6:57PM by PIB Chennai
நூற்றாண்டின் மிகப் பெரிய தொற்றிலிருந்து, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு வெளி வர முன்னணியில் நின்று போராடியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும், பிரச்னைகளை தகர்தெறியும் பிரதமரை நாம் பெற்றுள்ளதாகவும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று சமயத்தில், மக்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்கு போதிய வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்தார். மக்களின் சுய கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை ஆகியவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான நம்பிக்கையை பிரதிபலித்தது. அனைத்து தரப்பு மக்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்காக மத்திய அரசு பணியாற்றியுள்ளது. நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 141 கோடியை கடந்துள்ளது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது.
பீதியடையாமல், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்தது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது, அவற்றை சமாளிப்பதற்கான பொருட்கள் போதிய அளவில் இல்லை. ஆனால், தற்போது தடுப்பூசி, வென்டிலேட்டர், மருந்துகள் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
2020ம் ஆண்டு ஜனவரிக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 900 மெட்ரிக் டன்-ஆக இருந்த மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி தற்போது நாள் ஒன்றுக்கு 9000 மெட்ரிக் டன்னுக்கு மேல் அதிகரித்துள்ளது.
நாட்டில் 80,000-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களும்,2,600 கொரோனா பரிசோதனை ஆய்வு கூடங்களும் உள்ளன. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்களை இந்தியா தற்போது உற்பத்தி செய்கிறது.
2020ம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் 10,000 என்ற அளவில் இருந்த தனிமை படுக்கைகளின் எண்ணிக்கை தற்போது 15 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐசியு படுக்கைகள் 85,000க்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அனைத்தும் உள்ளடக்கிய அதிகாரமளித்தல் தேசிய தர்மம், மற்றும் சமாதானம் செய்து கொள்ளாத அதிகாரமளித்தல் மோடி அரசின் தேசிய நீதி. முன்னேற்ற நடவடிக்கையில், சமூகத்தில் உள்ள அனைவரையும் சம அளவிலான நபர்களாக மோடி அரசு ஆக்கியுள்ளது.
இவ்வாறு திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள இணைப்பை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785357
*************
(Release ID: 1785382)
Visitor Counter : 240