எரிசக்தி அமைச்சகம்
சீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தின் முன்னேற்றம்.
Posted On:
26 DEC 2021 10:47AM by PIB Chennai
மாநிலங்களுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், நிதி நிலையைச் சீர்படுத்தும் நோக்கத்துட னும், சீர்திருத்தங்கள் அடிப்படையிலான,முடிவுகள் சார்ந்த, சீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தை மத்திய மின்சார அமைச்சகம் தொடங்கியது. மின் விநியோகத்தை நவீனப்படுத்துதல், கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மின் விநியோக நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
ரூ.3,03,758 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ.97,631 கோடி ஒதுக்கியுள்ளது. 2025-26 நிதியாண்டு வரை இது செயல்பாட்டில் இருக்கும் . சீர்திருத்தங்கள் அடிப்படையில், நிதி உதவி அளிக்கப்படும். அனைவருக்கும் ஒரே அணுகுமுறை என்ற வகையில் இல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான செயல் திட்டத்தின் அடிப்படையில் இதன் அமலாக்கம் இருக்கும் என்பது இதன் தனித்துவமான அம்சமாகும்.
மின் விநியோக நிறுவனங்களின் நிதி இழப்பு என்ற தற்போதைய நிலையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீராக்கும் நோக்கத்துடன், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கிடைக்கும் பலன்களைப் பெறுவதற்கு மாநிலங்களின் தயார் நிலை பற்றி மதிப்பிடும் வகையில், பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தங்கள் நிறுவனங்களின் இயக்கத்தை சீர்படுத்தும் முனைப்பில், அசாம், மேகாலயா ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785248
****
(Release ID: 1785342)