ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன் தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு ஓவர் டிராப்ட் வசதி தொடக்கம்
Posted On:
26 DEC 2021 12:54PM by PIB Chennai
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் அமிர்தப் பெருவிழாவையொட்டி, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் டிசம்பர் 18-ந் தேதி சிறப்பு விளக்கவுரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வங்கிகளின் மூத்த அதிகாரிகள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு ரூ.5,000 வரை ஓவர் டிராப்ட் வழங்கும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை செயலாளர் திரு. நாகேந்திர நாத் சின்ஹா இதனைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சுமார் 5 கோடி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785274
*****
(Release ID: 1785323)
Visitor Counter : 602