சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகளின் இயலாமையை முன்கூட்டியே கண்டறிதல்,தொடக்கத்திலேயே உதவி வழங்குவதற்கு மிக முக்கியம் : திரு ராம்தாஸ் அதவாலே

प्रविष्टि तिथि: 24 DEC 2021 5:50PM by PIB Chennai

குழந்தைகளின் இயலாமையை முன்கூட்டியே கண்டறிதல் முக்கியம்  என்றும், அப்போதுதான் தொடக்கத்திலேயே உதவி வழங்கி, அவர்களின் உகந்த வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் மத்திய அமைச்சர்   திரு ராம்தாஸ் அதாவ்லே கூறினார். 

நவி மும்பையில், அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை மத்திய அமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குழந்தைகள் 6 மாதங்களை நிறைவு செய்வதற்கு முன்பே, அவர்களை மருத்துவரிடம் காண்பித்து, அவர்கள் ஏதாவது இயலாமையால் சிரமம்படுகிறார்களா என்பதைப்  பரிசோதிக்க வேண்டும்.

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ், 7 தேசிய மையங்களில், இயலாமையை முன்கூட்டியே கண்டறியும் 14 மையங்கள் உள்ளன, 7 ஒருங்கிணைந்த மண்டல மையங்களும் ஏற்கனவே செயல்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும்  அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீத்திலிருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு 3 சதவீத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784922

                                                                                ******************

 

 


(रिलीज़ आईडी: 1785011) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi